Monday, March 19, 2007

தரமான பிழைதிருத்தி

தமிழில் தரமான பிழைதிருத்தி தேவை. நடைமுறையில் எதுவும் சரியில்லை. 4000 ரூபாய் கொடுத்து வாங்கிய தமிழ் பிழைதிருத்தியும் ஏமாற்று வேலைதான். இதனை வைத்து சில வியாபாரிகள் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.முதலில் தமிழ் எழுத்துருவை தரப்படுத்துங்கள். யுனிகோடை பொதுமைப் படுத்துங்கள். டாஸ்கி, டைப்ரைட்டர், முதலிய பழைய குப்பைகளை தூக்கி எறியுங்கள். தமிழ்நெட் 99 ஐ இன்னும் மேம்படுத்துங்கள், எளிமைப்படுத்துங்கள்.அரசே, தமிழ் எழுத்துருவை பொதுமைப்படுத்தி வெளியிடலாம். தமிழ்நெட் 99 ஐ ஏழு ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் மேம்படுத்தவில்லை. தமிழக அரசு இதனைச் செய்யும் என நம்புகிறேன்.அரசே தமிழுக்கென்று ஓர் நல்ல அகராதி வெளியிடலாம். நல்ல பிழைதிருத்தியும் வெளியிடலாம். அதுபோல் தமிழில் பல வியாபாரிகள் பல எழுத்துருக்களைக் கைப்பற்றி, பிழைத்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து அவற்றை அரசே பொதுமைப்படுத்தி ஒரே தொகுப்பாக வெளியிடலாம்.

No comments: