Monday, April 30, 2007

கடவுள் உண்டா இல்லையா

கடவுள் உண்டா இல்லையா என்று ஆராய்வது வீணான வேலை. ஏனெனில் கடவுள் என்பதே, ஒரு கருத்து. பிரபஞ்சம், இயற்கையை கடவுள் என்று அழைத்தால், நம் வழிபாடுகளை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அதற்கு உணர்வும் அறிவும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

என்னையும்

என்னையும் தங்கள் முயற்சியில் இணைத்துக் கொள்ளுங்கள். மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறது தமிழ் சமூகம். எழுத்து மூலம் எதிர்த்துக் குரல் கொடுப்போம். சமூகத்திற்கு இல்லை எல்லை. எல்லை கட்ட முயல்வோரை சேர்ந்தே முறியடிப்போம்.

சொல்லுங்கள்

Jayashree Govindarajan Says:
March 15th, 2007 at 1:05 pm
எழுத்தாளர் ஒளிர்ஞர்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
வசம்பை பிள்ளை வளர்ப்பான்
அல்லது பேர் சொல்லாதது
என்று சொல்வார்கள்.
அதுமாதிரி ஆகிவிட்டதா
ஐயங்கார் என்ற வார்த்தை?
எனக்கு அப்படித் தோன்றவில்லை.
நீங்களே வேறு பெயர் இருந்தால் சொல்லுங்கள்.

ஐயங்கார் புளியோதரை

ஐயங்கார் புளியோதரை”
எழுத்தாளர் ஒளிர்ஞர் (writer olerzor) Says:
March 14th, 2007 at 3:20 pm

சாதிகளை ஒழிக்க போராடுகிற நாம்,
குறிப்பிட்ட சாதியின் பெயரில்
உணவு மெனுக்களை குறிப்பிட வேண்டாமே!?

கவிதையா

Jayashree Govindarajan Says:
March 15th, 2007 at 1:10 pm
நல்லவேளை
எழுத்தாளர் ஒளிர்ஞர்,
இது கவிதையான்னு
கேக்க வந்தேன்.

கவிதையல்ல உளறல்

ஊத்தப்பம்
பார்க்கப் பிடிக்கும்
சாப்பிடப் பிடிக்காது

தின்னப் பிடிக்கும்
உண்ணப் பிடிக்காது

ஊத்தப்பம்
சாப்பிடப் பிடிக்கும்
சமைக்கப் பிடிக்காது

பிறர் சமைத்தால் பிடிக்கும்
நானே சமைத்தால் பிடிக்காது

இது கவிதையல்ல
ஊத்தப்பம் தின்றதால்
வந்த உளறல்

Monday, March 19, 2007

கடவுள் ஒரு சேடிஸ்ட்


நாக்கு இருக்கும் போது,
பட்டினி போடுவான்
அல்லது, கசப்பான
வேப்பெண்ணெய்
குடிக்கத் தருவான்.


நாக்கை அறுத்த பின்போ,
திணறத் திணற விதவித
உணவுகளைத் தருவான்,
அல்லது குடிக்கத் தருவான்
சுத்தனான தேன்


அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்

குப்பைக் கவிதை - 2

ஓடாதே ஓடாதே நண்பா,
படிக்காமல் போகாதே சும்மா.

அகரம் முதல் னகரம் வரை,
மின் கவிதை படித்துத் தொலை.

பயன்படுத்தாதே உன் மதி,
இதைப் படிப்பதே தலை விதி.

குப்பைக் கவிதை - 1

தெருவில் கிடந்தால் ஆணி
சாலையில் நடந்தால் ஞானி

விண்ணில் பறப்பது திமிங்கலம்
மண்ணில் மிதப்பது அமங்கலம்

கண்ணீரில் சீண்டுவது வட்டம்
தண்ணீரில் நீந்துவது சட்டம்

பூச்சாண்டி

சொர்க்கம் நரகம் - பொய்

ஆதாம் ஏவாள் - கற்பனை

கடவுள் பேய் - பூச்சாண்டி

நானும் நீயுமே உண்மை

தெண்டக் கதை

சொந்தக் கதைகள்
நொந்தக் கதைகள்

கேட்டக் கதைகள்
கெட்டக் கதைகள்

கண்டக் கதைகள்
தெண்டக் கதைகள்

கடவுள் இல்லையா?


கடவுள் இல்லையா?
இந்த கேள்விக்கே
பொருள் இல்லை.
கடவுள் என்பது
கற்பனைப் பாத்திரம்.

கடவுளுக்கு எந்த
பொருளும் இல்லை.

கடவுள் என்பது
இல்லாத உருவகம்.
எட்டாத அறிவுக்காக,
இனங்காணர் பயத்துக்காக
வடிக்கப்பட்டஓர்
ஊன்றுகோலே கடவுள்.

சோம்பேறியின் குறிப்பு

கவிதை எழுத ஆர்வம்
ஆனாலும் சோம்பல்
சோம்பேறிக்கு கிடைத்தது
குதிரைக் கொம்பு
வடிகாலாக இந்த
மின் கவிதை

சில நேரங்களில்
கடவுள் இருப்பதை
உணர்கிறேன்
அந்த உணர்ச்சிக்கு
அர்த்தம் இல்லை
ஆனாலும் பரவசம்.

ஏதோ உள்ளது
பிரபஞ்சத்தில்.

காய்ந்த மாடு

அண்மைக்காலமாக தமிழ் சினிமாவின் சாபக் கேடாக, சில சின்ன நடிகன்கள் வந்திருக்கிறான்கள். எந்த முதிர்ச்சியும் இல்லாமல் காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் பாய்ந்தது போல டூயட் பாடுறான்கள்.

இந்த குட்டி நாய்கள் தொல்லை பொறுக்க முடியாமல், கடந்த 10 ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவே பார்ப்பதில்லை. மொத்தத்தில் தமிழ் நாட்டுக்கு இது கஷ்ட காலம்.

பழனி வைத்தியர்


பழனி இப்போது போலி வைத்தியர்களுக்குப் புகழ்பெற்று விட்டது. டிவியைப் பார்க்க முடியவில்லை, பத்திரிகைகளைப் புரட்ட முடியவில்லை. எங்கும் இந்த போலி வைத்தியர்கள் ஆக்ரமித்து, பணம் பண்ணத் தொடங்கி விட்டார்கள். எத்தனையோ போலி சாமியார்களைக் கைது செய்கிறார்கள். இந்த பழனி வைத்தியர்களை ஏன் இன்னும் கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மலையாள ஆசை


எனக்கு நீண்ட நாளாக ஆசை. மலையாளத்தில் திரைப்படம் தயாரிக்க வேண்டும். நிச்சயமாக தமிழில் திரைப்படம் தயாரிக்க மாட்டேன்.ஏனெனில் எதார்த்தங்களுக்கும், அறிவு ஜீவித்தனத்திற்கும் அதிக மரியாதை கொடுப்பவர்கள் மலையாள மக்கள்.
நான் பிறப்பால் தமிழன். ஆனால் என்னைக் கவர்ந்தவை மலையாளப் படங்கள்தாம். இன்று சிறுபிள்ளைத்தனமாக நடிக்கும் தமிழ் நடிகர்களை விட, மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் முதலிய மலையாள நடிகர்களைத்தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது.

வேலை வெட்டி

உனக்கு வேறு வேலை வெட்டி இல்லையா? உன்னை வைத்து கண்ட கண்ட நடிகன்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறான்கள். முதலில் நாட்டைப் பற்றி நன்றாக அறிந்து கொள். நம் நாட்டை முன்னேற்ற என்ன என்ன செய்யலாம் என யோசி. அட்லீஸ்ட் உன் குடும்பத்தைப் பற்றியாவது கொஞ்சம் யோசி.
படங்கள் ரிலீஸ் ஆகி விட்டால் மட்டும் உலகம் செழித்து விடுமா? இந்த நடிகன்கள் நாட்டுக்காக என்ன தியாகம் செய்தார்கள்? ரசிகர்களின் தலையில் மிளகாய் அரைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் உன் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள். அப்போதுதான் நிஜ மனிதர்களின் வலி தெரியும்.நடிகன்கள் போன்ற மாயை மனிதன்களின் உண்மை சொரூபம் புரியும்.

இரண்டு தலை பெண்கள்

ஒரே உடலில் இரண்டு தலை பெண்கள். பார்க்க அதிசயமாகவும், அதே நேரத்தில் பரிதாபமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தங்கள் இயல்பு வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது.

இயற்கை செய்த நூலிழை பிழையில், ஒரே உறையில் இரண்டு கத்திகள் என்பது போல, ஒரே உடலில் இரண்டு ஆன்மாக்கள். இரண்டு ஆன்மாக்களும், ஒரே உடலில் இருந்து எப்படி ஒற்றுமையாகச் செயல்பட முடியும் என்பது மிகப் பெரிய ஆச்சரியம்.

யாராவது முடிந்தால் இப்படிப்பட்டவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை வெளிப்படுத்துங்கள். இவர்களைப் பேட்டி கண்டு வெளியிட முனைகிறேன்.இறைவன் (இருந்தால்) படத்தில் கண்டுள்ள இவர்கள் என்றைக்கும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று மன்றாடுகிறேன்.

“இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான். அவைதான் ஆணும் பெண்ணும்” என்கிறது இத்தாலி பழமொழி ஒன்று. இயற்கையின் பிழைதான் பரிணாம வளர்ச்சி. பரிணாமம் செய்த பிழைதான் மனிதன் உருவானது. இதுபோல ஒரே உடலில் இரண்டு தலைகள். இதுவும் இயற்கையின் பிழைதான். பிழையா, அதிசயமா? அதிசயம் என்பேன்.

மூட அழகிப் போட்டி


அழகிப் போட்டிகள் நடத்துவதை கடுமையாக எதிர்க்கிறேன். நான்கு நீதிபதிகள் சேர்ந்தால் ஒரு பெண்ணின் அழகின் இலக்கணத்தை எழுதிவிட முடியாது. மேலும் பெண்ணடிமைத்தனத்தின் நவீன வடிவம் இந்த அழகுப் போட்டி.
இதற்கு பெண்கள் அமைப்பினரும், பெண்ணியல் வாதியினரும் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.நம் நாட்டில் ஒழிக்க வேண்டிய மூடப் பழக்கவழக்கங்களில் அழகிப் போட்டியும் ஒன்று.

யோவ்

உன் பிடித்த
நடிகன் பொம்மையை
மெழுகில் செய்தால் என்ன?
களிமண்ணில் செய்தால் என்ன?

முதலில் உன் வீட்டில்
அடுப்பெரிகிறதா என பார்.

துளிக் கவிதை

இருட்டின் ஓலம்
கண்கூசிய வெளிச்சம்
உயிரின் அலறல்

நெருங்கிய உடல்கள்
விலகிய உள்ளங்கள்
கற்பிழந்த ஆன்மாக்கள்

இன்றே கடைசி நாள்
ஈயடித்த திரையரங்கம்
மறுபடியும் முதல் நாள்

48 மணிநேர பணிகள்
அலுக்காத மனிதன்
சூடான கணினி

குளிரூட்டும் கோடை
கொதிக்கும் மழை
தலைகீழ் சென்னை

எழுத்தாளர் ஒளிர்ஞர்

நீ

நடமாடும் பிணம்
நெருப்புக்கு உணவு
உன்னுடலில் சுமக்கிறாய்
டிரில்லியன் கிருமிகள்

இன்றைக்கு அழகி
நாளைக்கு கிழவி
மறுநாளோ அழுகி

நேற்று குழந்தையாய் தவழ்ந்தாய்
இன்று இளமையால் துடிக்கிறாய்
நாளை கிழமையால் துவள்வாய்

காலத்தின் கண்களில்
நீ ஒரு மண்மூட்டை
அதற்குள் ஏண்டீ
மனக்கோட்டை?

எழுத்தாளர் ஒளிர்ஞர்

ஓஷோ பாணியில்

அவனை மன்னித்துக் கொள்,
உன்னை தன் தோழியாக
எண்ண முடியவில்லை.
காதலியாகத்தான் பார்க்கிறான்.

ஓஷோ பாணியில்
பச்சையாகச் சொன்னால்
பாலுறுப்பாகத்தான்
கற்பனை செய்ய முடிகிறதாம்.

அவனை நீ வெறுத்தாலும் சரி
காதலர்கள் மறைக்கும்
கசப்பான உண்மையை
போட்டுடைத்த அவனை
மறுபடியும் மன்னித்துக் கொள்.

தரமான பிழைதிருத்தி

தமிழில் தரமான பிழைதிருத்தி தேவை. நடைமுறையில் எதுவும் சரியில்லை. 4000 ரூபாய் கொடுத்து வாங்கிய தமிழ் பிழைதிருத்தியும் ஏமாற்று வேலைதான். இதனை வைத்து சில வியாபாரிகள் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.முதலில் தமிழ் எழுத்துருவை தரப்படுத்துங்கள். யுனிகோடை பொதுமைப் படுத்துங்கள். டாஸ்கி, டைப்ரைட்டர், முதலிய பழைய குப்பைகளை தூக்கி எறியுங்கள். தமிழ்நெட் 99 ஐ இன்னும் மேம்படுத்துங்கள், எளிமைப்படுத்துங்கள்.அரசே, தமிழ் எழுத்துருவை பொதுமைப்படுத்தி வெளியிடலாம். தமிழ்நெட் 99 ஐ ஏழு ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் மேம்படுத்தவில்லை. தமிழக அரசு இதனைச் செய்யும் என நம்புகிறேன்.அரசே தமிழுக்கென்று ஓர் நல்ல அகராதி வெளியிடலாம். நல்ல பிழைதிருத்தியும் வெளியிடலாம். அதுபோல் தமிழில் பல வியாபாரிகள் பல எழுத்துருக்களைக் கைப்பற்றி, பிழைத்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து அவற்றை அரசே பொதுமைப்படுத்தி ஒரே தொகுப்பாக வெளியிடலாம்.

சப்பானில் லசினி

(கவுண்டமணி பாணியில் படியுங்கள்)

அடே,தேங்காய்த் தலையா.
ஜப்பான்ல எந்த படம் ஓடினா
உனக்கு என்னய்யா?
வெப்சைட்டைப் போட்டு
நாஸ்தி பண்றே?

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
அதான் இங்க நடக்குது.
எல்லா பய நடிகனுவளுக்கும்,
எல்லா நாட்லயும்
சில பைத்தியக்கார ரசிகனுக உண்டு.

அதை செய்தியா எழுதி,
ஏன் வெப்சைட் வயித்துல
புளியைக் கரைக்குறே?

இறைவன் இல்லை

இறைவன் இல்லை
ஆனால் இருக்கிறான்

இறைவன் இருக்கிறான்
ஆனால் இல்லை

இல்லாதது போல் இருக்கிறான்
இருப்பது போல் இல்லாமல்!

ஹைக்கூ

செல்பேசி மணி
கைக்கெட்டாத குரல்
உள்ளங்கை இதயம்

இரத்தம் இல்லாத மூளை
பிதற்றல் நிறைந்த மனம்
பித்தனுக்குப் பித்தன்

கணினியின் சொடுக்கி
மனம்போல வாழ்வு
மனமில்லாத உறக்கம்

அழுதுவடியாத இரவுகள்
தொலையாத வாழ்க்கை
காணாமல் போன வெளிச்சம்

எள்ளென்றவுடன் எண்ணெய்
விண்ணென்ற சினம்
கண்ணில்லாத சாலை

கண்ணாடி அணிந்த பெண்
முன்னாடி பார்த்த பார்வை
பின்னாடி பார்க்காத போதை

குட்டி நாய் பாணி

குட்டி நாய் காலைத் தூக்கி, மரத்தில் சிறுநீர் கழிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பார்க்காதவர்கள், தற்போதைய தமிழ் சினிமாக்களைப் பாருங்கள்.

அதில் வரும் கதாநாயகன்கள் குட்டி நாய் பாணியில்தான் காலைத் தூக்கி காதல் டூயட் பாடுகிறான்கள்.

அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்

பிரசவ வலி

ரேடியோ மிளகாயில் காலை நேரத்தில் நம் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் குரலில் ஒருத்தி பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? நம்ம சுச்சியைத்தான் சொல்கிறேன். ஏதோ குசித்ராவாம். சுச்சி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

அரவாணிகளிடம் கேட்டுப் பாருங்கள். சுச்சி என்றால் அரவாணிகளின் செயற்கை மார்பகம். இந்த குசித்ரா பிரசவ வலியில் கதறுவது போன்ற குரலில் பேசுகிறாள். இதை எப்படித்தான் சென்னைவாசிகள் ரசிக்கிறார்களோ?

அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்

Sunday, March 18, 2007

மிளகாய் பண்பலை

மிளகாய் பெயரில்
பண்பலை வானொலி,
காலை நேரத்தில்
ஒட்டக அறிவிப்பாளி,


பெயரோ குசித்ரா -
செல்லமாய் குச்சி
அவளின் குரலை
வர்ணிக்கிறேன் கேளுங்கள்.


பிரசவ வலியில்
கதறும் குரல்
காக்கா வலி தொனி


ஈயத்தைக் காய்ச்சி
மிளகுப் பொடி கலந்து
ஊற்றும் குரல்.


பாலுறவு உச்சத்தில்
பறங்கிப் பெண்கள்
போடும் கூச்சல்


சிறுநீர் முடுக்கியவளின்
தர்மசங்கட முழக்கம்.


தொடை இடுக்கில்
தேள்கடி பட்டவளின்
அபாயக் கூச்சல்.


அவள் பெண்ணா??
அரவாணியா - அல்லது
இரண்டும் கெட்டானா?
வானொலிக்கே வெளிச்சம்.


அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்

வெள்ளையடித்த கல்லறைகள்


கிறித்தவ சமயத்தில் பல போதகர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாக, மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பல தந்திர வார்த்தைகளைப் பயன்படுத்தி, மக்களின் பணத்தைக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்கள் இப்படிப்பட்ட ஓநாய்களுக்குப் பலியாகி விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவர்களை ஒழித்துக் கட்டினால்தான், நாடு உருப்படும்.